AdsforIndians

ராஜயோகம் அளிக்கும் ராகு

Wednesday, May 26, 2010

 
அவன் பெரிய வைரக்கியகாரன் அவன் நினைத்ததை செய்து முடிப்பான் என்று சொல்ல கேட்டு இருக்கிறௌம். அவர்கள் எல்லாம் ராகுவின் வலிமையான ஆதிக்கம் பெற்றவர்கள் ஆவார்கள். உலகம் முழுவதும் சுற்றி உயர் புகழ் பெறவும் பலவித மொழியினாலும் பாராட்டப்படவும் அதிகாரத்துடன் கூடிய அந்தஸ்து இவற்றை அடையவும் பொருள் வளத்தில் செழிப்படையும் அனைத்துலகிலும் ராஜயோகத்தை அளிப்பவர் ராகு.
 

ராகு யார்?

மரணமில்லாப் பெருவாழ்வு வாழ வேண்டுமானால் பாற்கடலில் அமிர்தத்தைக் கடைய வேண்டும் அப்படிக் கடைய மந்திரம் மலையை மத்தாக உபயோகிக்க வேண்டும். தேவ பலத்தினால் மட்டும் அமிர்தத்தை எடுக்க முடியாது. அசுரபலம் தேவை என்று திருமால் மகாவிஷ்ணு தேவேந்திரனுக்கு யோசனை கூறினார். உடனே ஆதிசேஷன் மந்திர மலையைப் பெயர்த்து எடுத்துக் கொண்டுவந்தான். சந்திரன் தூணாக இருந்தான். வாசுகி எனும் பாம்பு நானாக (கயிராக) உதவியது. மலையைக் கடைய ஆரம்பித்தார்கள். அமிர்தத்தைக் கடைய முற்பட்டபொழுது ஏற்பட்ட வலி தாங்காமல் வாசுகி விஷத்தைக் கக்க அனைவரும் பயந்து பரமசிவனிடம் முறையிட்டு சரணடைந்தார்.கள். பரமசிவனார். ஆலகால விஷத்தைத் தானே உண்டு நீலகண்டனாக மாறினார்.. மீண்டும் பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்தார்கள். அதில் திருமகள் ஐராவதம் காமதேனு என்று பல அரிய பொருள்கள் பாற்கடலிலிருந்து வெளியே வந்தன. கடைசியில் அமுதம் பெருக்கெடுத்தது. அமிர்தம் கிடைத்ததும்; ஒரு பிரச்சனை ஏற்பட்டது தீயவர்களான அசுரர்கள் அமுத்ததை உண்டால் அவர்கள் சிரஞ்சீவியாகி விடுவார்கள் உலகத்தில் அவர்களால் ஏற்படும் துன்பத்திற்கு விடிவே கிடையாது என்று மோகினிப் பெண் உருவவெடுத்து மகாவிஷ்ணு அமிர்தத்தை தானே பங்கிடுவதாகவும் தேவர்கள் ஒரு புறமும். அசுரர்கள் இனனொரு புறமும் என்று இருபுறமாக அமரும்படி கேட்டுக்கொண்டாள். தேவர்கள் அனைவரும் திருமாலே மோகினி என்று கண்டு கொண்டார்கள் ஆனால் அசுரர்கள் மோகினியின் அவய அழகுகளில் பார்வையைப் பதித்து சண்பக மலரும் செம்பொன்னும் இணைந்த தேகம் முகிலையொத்த குழல் மூன்றாம் பிறையை ஒத்த நெற்றி மானின் கண்கள் எள் போன்ற நாசி மலையை நிகர்த்த முலைகள் ஈட்டி போன்ற முலையின் காம்பு பிடியில் அடங்கும் இடை ஆமையையொத்த புறவடிவு வாழையயொத்த தொடைகள் பந்து போன்ற குதிகால் தாமரை மலர்போன்ற பாதங்கள் எந்த எந்த அவயவங்களைப் பார்த்தார்களோ அந்தந்த அவயவங்களில் மோகித்து தம்மை மறந்து ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் காஸ்யபரின் மகள் ஸிம்ஹிகைக்கும் விப்ரசித்து என்ற அசுரனுக்கும் பிறந்த மகன் சுவாணபானு அமிர்தம் கடைந்தெடுப்பதில் தேவர்கள் அசுரர்கள் இருவரின் பங்கு இருந்தன. ஆனால் அதனைப் பங்கிடுவதில் தேவர்களுக்கு அதிகமாகவும் அசுரர்களுக்கு வெறும் கரண்டியைக் காட்டியும் ஸ்ரீமகாவிஷ்ணுவான மோகினி பாரபட்சம் பண்ணுவதைக் கண்டான். உடனே சட்டென்று அவனும் தேவர்கள் பக்கம் சென்று தேவவடிவில் அமர்ந்து விட்டான். அமிர்தம் பரிமாறப்பட்டாகி விட்டது. அவன் அதை நக்கி அசிங்கமாகச் சாப்பிடுவதைக் கண்ட சூரிய சந்திரர்கள் பார்த்தனர். மோகினியான மகாவிஷ்ணுவிடம் சாடை காட்டித் தெரிவித்தும் விட்டனர். உண்மையை உணர்ந்து கொண்ட மோகினியாக இருக்கும் ஸ்ரீமகா விஷ்ணு பரிமாறிய கரண்டியாலேயே சுவர்ணபானுவின் தலையில் ஓங்கி அடித்தார் சுவர்ணபானுவின் தலை துண்டிக்கப்பட்டுவிட்டது. அமிர்தம் உண்டதால் சுவர்ணபானு இறக்கவில்லை. மாறாக வெட்டபட்ட தலை அப்படியே இருக்க அதிலிருந்து உடல் கருநாகமாக வளர்ந்து ஒரு புதிய உருவாக மாறியது. இதுவே ராகுதேவன் வெட்டப்பட்ட உடலுடன் ஐந்து தலைநாகம் வடிவில் தலை வளர்ந்தது அது கேது எனப்பட்டது. அமிர்தம் பருகியதால் உயிர்பெற்று பரமனை நோக்கித் தவம் செய்து கிரக பதவி பெற்றதினால் ராகு கேது இவ்விருவரும் பன்னிரு ராசிமண்டலத்தில் அப்பிரதட்சணமாக இயங்கி வருகிறார்கள். மற்ற ஏழு கிரகங்களும் ராசி சக்கரத்தில் வலமாகச் சுற்றி வருகையில் ராகுவும் கேதுவும் அவர்களுக்கு எதிரி திசையில் இடமாக எப்பொழுதும் எதிரெதிராக 180 டிகிரியிலேயே சுற்றிவருவர். ஆண் பெண் இனப்பிரிவில் அலியாவான் ராகு குணங்களில் தாமஸகுணத்தோன். தென் மேற்குத் திசைக்குரியயோன். பஞ்ச பூதங்களில் வானம் இவன். ராகு பகவான் நவக்கிரஹ பீடத்தில் சூரியனுக்கு வடமேற்கே அமர்ந்திருப்பதால் உயரமான தோற்றம் உடையவர். ஆட்டுக்கடா வாகனமுடையவார் எட்டுக்குதிரைகள் பூட்டிய தேரிலும் இருப்பவர். நான்கு கைகள் உடையவர் கறுப்பு வண்ணம் இவருக்கு பிடித்தமானது.

ஜாதகங்களில் ராகு
பூமியிலிருந்து சுமார் 9 கோடி மைல் தூரம் உள்ள இந்த ராகு கிரகம். சூரியனுக்கு 13 000 விஸ்தார யோசனையுள்ள மண்டலத்தில் உள்ளது. சூரியனை ஒரு முறை அபிரதஷிணமாக சுற்றிவவர பதினெட்டரை வருடங்கள் ஆகும். புராணத்தில் கரும்பாம்பு என்று அழைக்கப்படும் ராகு கிரகம் ஜோதிட சாஸ்திரத்தின் படி எட்டாவது கிரகம் இதை சாயா கிரகம் என்று கூறுவார்கள் நிழல் கிரகம் என்றும் கூறுவார்கள். சாயா என்றால் நிழல் என்று பொருள். அவர்கென எந்த ராசியிலும் ஆதிபத்தியமில்லை. எந்த வீட்டில் இருக்கிறாரோ அதுவே அவரது சொந்த வீடாகும். எந்த ராசியில் இருக்கிறாரோ எந்த கிரகத்தினால் பார்க்கப்படுகிறாரோ எந்த இடத்தில் சோக்கைபெற்றுள்ளாரோ அந்த இடத்தின் பலனை முழுமையாகத்தருவார் ஒருசில ஜோதிட சாஸ்திர நுல்கள் மட்டும் விருச்சிகம் இவருக்கு உச்சவீடு என்றும் ரிஷபம் நீச வீடு என்றும் கன்னி இவனுக்குச் சொந்த வீடு என்றும் குறிப்பிடுகிறது. ஒரு ராசியில் 1.5 வருடம் சஞ்சாரம் செய்யும் ராகு திருவாதிரை சுவாதி சதயம் நட்சத்திரங்களுக்கு அதிபதி. ஆங்கில எண்ணில் 4ம் எண்ணுக்கு அதிபதியாவார். 4 13 22 தேதிகளில் பிறந்தவர்கள் ராகு ஆதிக்கம் உடையவர்கள். நவக்கிரகங்களில் மிகவும் பலம் வாய்ந்தவர் சனியை விட செவ்வாயும் செவ்வாயை விட புதனும் புதனை விட குருவும் குருவை விட சுக்கிரனும். சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் இவர்கள் அனைவரை விட ராகுவும் கேதுவும் பலம் பொருந்தி விளங்குகிறார்கள். சந்திர சூரியர்களையே பழமிழக்கும் படி செய்யவும் ஒளி குன்றும்படி செய்யவும் கட்டுப்படுத்தவும் ஆற்றல் உள்ளவர் ராகு யோகத்திற்கு அதிபதி வீரிய பாம்பைப்பற்றி விளங்கச் சொல்லுவாய் யோகந்தன்னை என்ற படி யோக யோகத்தைத் தருபவர் ஒருவர் ஜாதகத்தில் ராகு நல்ல இடத்தில் இருந்தால் நல்லவர் சோக்கை மற்றும் சுபகிரக பார் வை இருந்தால் ராகு அந்த ஜாதகனைசீமானாகவும் அரசர்க்கு ஒப்பானவராகவும் வாழச் செய்வார் அதனால் தான்
"ராகுவைப் போல் கொடுப்பாரில்லை" என்று சொல்லுப்படுகிறது. அரசாங்கத்தில் பதவி-புகழ் இவற்றைப் பெறுவதற்கும் அதிகார அற்றலை அடைவதற்கும் உலகியல் விஷயங்களில் அறிவைத் தருவதற்கும் உள்ளத்தில் தௌவை தருவதற்கும் அனைத்துலகிலும் பயணம் செய்வதற்கும் ராகு பலம் வேண்டும். தந்தை வழி பாட்டனாருடைய சொத்துகள் எல்லாம் அனுபவிப்பதற்கும் கூட ராகுவின் பலம் வேண்டும். மேலும் பலம் பெற்ற ராகு ஓர் ஆண் மகனுக்குப் பெண்கள் மூலம் சுகத்தையும் செல்வத்தையும் சோர்த்து வைப்பான் ஸ்பெகுலேஷன் துறை மூலம் ஒருவனைக் கோடீஸ்வரனாக்குவான் ராகு. அன்னியமொழி பேசுபவர்கள் மூலம் அதிகம் லாபங்களை கொடுப்பவர் ராகுபகவான் ஆகும். கெட்ட வழிகளில் கூட ஒருவனை பொருளாதாரத்தில் உயர்த்துவதில் ராகுவிற்கு நிகர் ராகுவேதான். சூதாட்டம் போன்ற வகைகளில் பணம் சம்பாதிப்பது பொய் சொல்லி ஏமாற்றுதல் அரசாங்கத்திற்கு எதிரான செயல்கள் செய்து பணம் ஈட்டுவது (கள்ளக்கடத்தல் கள்ள நோட்டு அச்சிடுவது) போன்றவை ஆகும். சுபபலம் பெற்ற சனி ஒருவருக்கு எந்த அளவுக்கு உயர்வைத் தருவானோ அந்த அளவுக்கு உயர்வைத் தருவான் ராகு.

ராகு சரியில்லாத ஜாதகங்கள்

சந்திர சூரியர்களையே பலமிழக்கும் படி செய்யவும் ஒளி குன்றும் படி செய்யவும் கட்டுப்படுத்தவும் ஆற்றல் உள்ள ராகு கிரகத்திற்கு மிகப்பொய பகை கிரகங்கள் சூரியனும் சந்திரனும் ஆகும். ராசியில் ராகு கேதுவிற்கு சூரிய சந்திரர்கள் நின்ற ராசியும் ராசி அதிபதியும் பகைவர்கள். ராசியில் சூரிய சந்திரனுடன் ராகு கேது சோர்க்கை பெற்ற ஜாதகருக்கு இவர்கள் (ராகு கேது) இன்னல்களைத் தருகிறார்கள்.

மேலும் 2. 7. 8 இடங்களில் இருப்பதும் பாவக்கிரகங்களுடன் சோந்து இருப்பதும் பாவக்கிரங்களால் பார்க்கப்படுவதும் நீசக்கிரகத்துடன் சோந்து இருப்பதும் அந்த ஜாதகருக்குத் துன்பங்களை உண்டாக்கும். மேலும் ஜாதகத்தில் 5ம் இடத்தல் இருந்தால் புத்திரதோஷமும் 8ம்; இடத்தில் இருந்தால் மாங்கல்யதோஷமும் 7ம் இடத்தில் இருந்தால் திருமணத்தடை சர்பதோஷம் என்றும் எல்லா கிரகங்களும் ராகு கேது பிடிக்குள் அகப்பட்டு இருந்தால் கால சர்ப்ப தோஷம் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ராகுதோஷம் பெற்ற ஜாதகர்களுக்கு கடன் தொல்லை அதிகமாகும் தீய பெண்களுடன் நட்பு ஏற்பட்டு துன்பமடைவது சாராயம் சம்பந்தப்பட்ட வியாபாரத்தில் அவமானப்படுவது அதிக கஷ்டப்படுவது தற்கொலைச் செய்து கொள்ளக்கூடிய மனோபாலம் ஏற்படுவது கனவில் நோல் விஷப்பாம்புகளைப் பார்ப்பது பாம்புகளால் கடிக்கப்பட்டு துன்பத்தை அடைவது. கை கால்களில் சங்கிலி கட்டப்படும் வாய்ப்பு ஏற்படுவது பேய் பிசாசுகளால் தொல்லைகள் செய்வினைக்கோளாறு உண்டாவது. சாபங்களுக்கு ஆளாவது. மாந்தீரிக தொழிலில் ஈடுபடுவது. தீயபெண்களிடம் தொடர்பு விதவை பெண்களிடம் தொடர்பு அவர்களால் துன்பம் ஏற்படுவது விபச்சார பெண்களுடன் பழகி அவர்கள் வீட்டிலேயே காலத்தை கழிப்பது செக்ஸ் முறையில் அதிகமான காமபோதைக்கு ஆட்பட்டு பெண்களை கடிப்பது அவர்களின் பிறப்பு உறுப்புகளை எல்லாம் சுவைப்பது பெண் வியாதிகளால் அதிகமான துன்பம் அடைவது பெண்மோகம் கொண்டு பித்தனாக அலைவது. தன்னுடைய தேசத்தை விட்டு ஓடிப்போய் விடக்கூடிய வாய்ப்பு உருது பேசக்கூடிய நாடுகளுக்குப் போகும் சந்தர்ப்பம் ஏற்படும் பணம் கொடுத்தும் அந்த நாட்டிற்குப்போக முடியாமல் தவிப்பது நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் அகாலமரணம் அடைவது தூக்குப் போட்டுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இந்த ஜாதகருக்குக் கட்டாயம் ஏற்படுவது தன் தகுதிக்கு இனத்திற்கு சம்மந்தமில்லாத தொழில் செய்து நஷ்டமடைவது கஷ்டஜீவனம் கடன்தொல்லை உற்ற நண்பர்களால் தொல்லை அறுவை சிகிச்சை சிறை வாசபயம் ஏற்படுவது வருமான வாகளின் மூலம் துன்பங்கள் ஏற்படுவது காவல் துறையினரால் அவமானம் ஏற்படுவது விஷபயம் அங்கஹீனம் வாயுவலிப்பு நோய் பித்தநோய் மறைமுக உறுப்புகளில் நோய்கள் குஷ்டம் போன்ற கொடூர நோய்கள் (எய்ட்ஸ்) கண்டங்கள் ஏற்படல் குடல் சம்மந்தமான நோய் கட்டிகள் குடல்புண் மண்ணீரல் சம்பந்தமான நோய் பரதேச வாசம் ஜலகண்டம் தெருவில் வெட்டி பேச்சு அசிங்கமான பேச்சு நீண்டநாள் திருமணத்தடை புத்திரதடை தொழில் வளர்ச்சி தடை இவை அனைத்திற்கும் ராகு சரியில்லாதே காரணமாகும்.
ராகுவின் ஆற்றல் பெற

காளஹஸ்தி நாகைக்காரோணம் திருக்களர் இராமேஸ்வரம் திருநாகேஸ்வரம் திருப்பாம்புரம் பேரையூர்; திருச்செங்கொடு நாகர்கோவில் நாகநாதர் ஆலயம் திருவேற்காடு சிதம்பரம்தில்லைகாளி போன்ற தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தால் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெறலாம்.

ஸ்ரீகாளஹஸ்தி: இங்கு காளத்திநாதரின் உருவில் ராகுவும் ஞான பிரசசூணதேவியின் உடலில் கேதுவும் இருப்பதாக ஐதீகம். அதனால்தான் சூரிய சந்திர கிரகணக் காலங்களில் இக்கோயிலை மூடுவதில்லை. மற்ற எல்லாக் கோயில்களும் கிரகண காலங்களில் மூடப்பட்டுவிடும். இக்கோயிலின் செல்லும் அமைப்பே ராகு கேது ராசிமண்டலத்தில் அப்பிரதட்சணமாக இயங்கிவருவதுபோல இக்கோயில் வழி சுற்றும் அப்பிரதட்சணமாக அமைந்திருக்கிறது. மேலும் ராகு கேது தோஷ நிவர்த்திக்காக எல்லாக் கிழமைகளிலும் அதிலும் முக்கியமாக சோமவாரத்தில் (திங்கள் கிழமை) பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. ராகுவினால் ஏற்படும் தோஷம் விலக தக்க பரிகாரம் செய்தால் அவர் அருள்கிட்டும்.

திருநாகேஸ்வரம்: சுகில முனிவரின் மகனை தஷகன் என்ற பாம்பு தீண்டியதால் "நீ மானுட சர்ப்பமாகக் கடவாய்" என்று சபித்தார். தஷகன் முனிவரிடம் சாப விமோசனம் கோரினான். "பூலோகத்தில் மானுடப் பாம்பாகப் பிறந்து பல ஆலயங்களுக்குச் சென்று வா கடைசியில் விமோசனம் கிடைக்கும்" என்றார். தஷகன் மானுட சர்ப்பமாகப் பிறந்து பல ஆலயங்களுக்கு சென்று இறைவனை பூஜித்தான். கடைசியில் ஒரு மாசி சிவராத்திரியன்று முதல் ஜாமத்தில் குடந்தை நாகேஸ்வரரையும் இரண்டாம் ஜாமத்தில் சண்பகாரண்யத்தில் (திருநாகேஸ்வரம்) சுயம்புவாக விளங்கும் நாகநாதரையும் மூன்றாம் ஜாமத்தில் சேஷபுரி என்கிற திருப்பாம்புரத்தில் உள்ள ஸ்வாமியையம் நான்காம் ஜாமத்தில் நாகப்பட்டனத்தில் உள்ள ஸ்வாமியையும் வழிபட்டு சாப நிவர்த்தி கேட்டான். இறைவன் அவனை மீண்டும் "திருநாகேஸ்வரம் வருவாயாக" என்று அழைத்தார். திருநாகேஸ்வரத்தை அடைந்து சாபவிமோசனம் பெற்றான் தஷகன். பொழுது விடிந்து விட்டதால் ஸ்வாமி தஷகனை அங்கேயே தங்கி விடுமாறு கூறினார். தஷகனின் வேண்டுகோளின்படி இறைவன் அன்றுமுதல் திருநாகேஸ்வரர் ஆனார். ஊர் பெயரும் திருநாகேஸ்வரம் ஆயிற்று. சாபம் இங்கு நீங்கியதால்"ராகுதோஷமும் நாகதோஷமும் உடையவர்கள் என்னைத் தேடி வந்து அபிஷேக ஆராதனைகள் செய்தால் நான் அவர்களின் குறையைத் தீர்த்து வைக்கிறேன்"என்று சத்தியம் செய்தார். இங்கு ராகு பகவான் இரு தேவிகளான நாகவள்ளி நாககன்னி சகிதம் எழுந்தருளி இருக்கிறார்;. இத்தலத்தில் வழிப்பட்டால் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெறலாம்.

இராமேஸ்வரம்: திருக்களர் இராமேஸ்வரம் போன்ற தலங்களிலும் ராகு ஈசனை வழிபட்டுள்ளது இங்கு சென்று முதலில் தேவிப்பட்டனத்தில் உள்ள ஸ்ரீராமபிரான் வழிபட்ட நவக்கிரகங்களை வழிபட்டு பிறகு இராமேஸ்வரம் சென்று வழிபட்டால் ராகுதோஷம் மட்டும் இல்லாமல் அனைத்து வகையான தோஷங்கள் நீங்கும்.

திருப்பாம்புரம்: அதிகமான ராகுவினால் மனச்சோர்வு கொண்டவர்கள் இத்தலத்திற்கு சென்று வந்தால் உடனடியாக ராகுவினால் ஏற்பட்ட மனச்சோர்வு நீங்குகிறது. மேலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் கிடைக்கிறது.

நாகர்கோவில்:இங்குள்ள நாகநாதர் கோவில் நாகராஜன் விஷேசமானவர். இவர் ஆயில்ய நட்சத்திரத்தின் அதிதேவதையாக இருப்பதால் ஆயில்ய நட்சத்திரன்று விஷேச பூஜைகள் நடக்கும்.

திருச்செங்கோடு: ஆண் பாதி பெண்பாதி என்று சிவனும் சக்தியும் நின்ற கோலம் உள்ள கோவில். இங்குள்ள நாகர் உருவச்சிலைகள் மிகவும் அற்புதமாக இருக்கும்.

பேரையூர்:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகநாதர் கோவிலில் இக்கோவில் வழிபட்டால் திருமணத்தடை உடனடியாக நீங்குகிறது. கோயில் மதில் சுவர் முதல் கோயில் உட்புறங்களிலும் ஆயிரக்கணக்கான சர்ப்ப கருங்கள் விக்ரங்கள் உள்ளன. மேலும் ராகுவின் அதிதேவதை துர்க்கை காளி கருமாரி போன்ற தெங்வங்களை வழிபட்டாலும் ராகுவின் அருள் பெறலாம் திருவேற்காடு சென்னையில் திருவேற்காடு கருமாரியம்மன் வழிபாடு செய்தால் ராகுவின் அருள் பெறலாம்.

ஸ்ரீஅஷ்டதஜபுஜ மகாலெட்சுமி துர்காதேவி: புதுக்கோட்டையில் உள்ள புவநேச்வரி அவதூத வித்யா பீடத்தில் எழுந்தருளியுள்ள துர்க்காதேவியை வழிபட்டால் ராகுவின் அருள் பெறலாம். ஜாதகத்தில் ராகு சுக்ரன் இணைந்தவர்கள் ஸ்ரீ அஷ்டதஜபுஜ மகாலெட்சுமி துர்க்காதேவியை வழிபட்டால் சிறப்பான பலன்கள் அடையலாம்.

ஸ்ரீஅரியநாச்சியம்மன்: சிவனும் சக்தியும் நின்றகோலம் திருச்செங்கோடு சிவனும் சக்தியும் அமர்ந்த நிலையில் உள்ள இடம் உலகிலேயே அரியநாச்சியம்மன் மட்டும்தான் ஜாதகத்தில் ராகு செவ்வாய் இணைந்தவர்கள் இந்த கோவிலில் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை காணலாம்.

காளிவழிபாடு: மேலும் சிதம்பரம் தில்லைகாளி உறையூர் வெக்காளி சிவகங்கை வெட்டுடையகாளி மடப்புரம் பத்திரகாளி போன்ற காளி அன்னையை வழிபட்டாலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெறலாம்.

பஞ்சமிதிதி: நாகங்களுக்கு மிகவும் புனிதமான திதி இது இந்த நாளில் தான் நாகலோகத்தை பிரம்மா படைத்தார். பஞ்சமிதிதியில் விரதம் இருந்து நாக தேவதைகளை வணங்கினால் நாகதோஷம் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெலாம். புற்றுள்ள அம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை போய் வழிபாடு செய்தாலும் ராகு அருள் பெறலாம்.

கோமேதகம்: ராகுபகவானுக்கு விஷேசமான ரத்தினமாகும். இதை மருந்தாக்கி சாப்பிட நல்ல ஜீரண சக்தி உண்டாகும். உடலில் நல்ல பளபளப்பு உண்டாகும். நரம்பு தசை மூட்டுப்பிடிப்பு போன்ற வியாதிகளிலிருந்து குணம் கிடைக்கும். இதை வெள்ளியில் செய்து அணிந்து கொள்வது நல்லது.

நாகலிங்கபூ மந்தாரை மலர்கள் கொண்டு இறைவனை பூஜை செய்வதாலும் அபிஷேகத்தில் பாலில் அபிஷேகம் மஞ்சள் பொடி அபிஷேகம் செய்வதாலும் நேவேத்தியத்தில் பொரி தயிர்ஏடு அவியல் வகைகளை நேவேத்தியம் செய்வதாலும் உளுந்து பொருட்களில் செய்யப்பட்ட வடை புளியோதரை போன்ற உணவு வகைகளை நேவேத்தியம் செய்து உண்பதாலும் சிறுநாகப்பூ மரம் நாகலிங்கம் மரம் போன்ற மரங்களை நடுவதாலும் சிறுநாகப்பூ மரம் நாகலிங்கமரம் கருங்காலிமரம் செங்கருங்காலி மரம் மருதமரம் கடம்புமரம் போன்றவற்றிக்கு தண்ணீர் ஊற்றி வணங்கிவருவதாலும். ஆடை வகைகளில் நீலம் கருப்பு கருநீலம் கருப்பு கோடுகள் நீலநிற கோடுகள் போன்ற ஆடைகளை அணிவதாலும் ராகுவின் அருள் பெறலாம். ராகுவின் ஆதிக்கம் பெற்றவர்கள் வாஸ்து சாஸ்திர முறைப்படி தென்மேற்கு திசைகளில் வசிக்கலாம்-வீடுகள் கட்டலாம். ராகுதோஷம் நீங்க "அரிம் ஸ்ரீம் நசிமசி" மந்திரம் ஜெபித்தால் ராகுதோஷம் நீங்கும்-மேலும் ராகுவின் காயத்ரி மந்திரமான நகத்வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி ! தந்தோ ராஹீ ப்ரசோதயாத்! மந்திரத்தை தினமும் 18 தடவை சொல்லாம். ராகுதிசை ராகுபுத்தி நடப்பவர்கள் தினமும் சொன்னால் சிறப்பான பலன்களை அடையலாம். மேலும் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆதிஷேசன் மேல்படுத்து இருக்கும் அரங்கநாதருக்கு எதிரில் உள்ள உடல் முழுவதும் நாகங்களை அணிகலன்களாக அணிந்திருக்கும் கருடாழ்வாரையூம் சக்கரத்தாழ்வாருக்கு செல்லும் வழியில் ஒரு கையில் அமிர்த கலசத்தையும் ஒரு கையில் நாகத்தையும் பிடித்துக் கொண்டு உடல் முழுவதும் நாகங்களை ஆபரணமாக அணிந்து இருக்கும் அமிர்த கலச கருடாழ்வாரையும் வணங்கி வழிபாடு செய்தால் ராகு தோஷம் நீங்கும் மேலும் பறக்கும்; பறவைகள் மயில் கருடன் போன்ற பறவைகளுக்கு உணவு இடுதல் ராகு தோஷம் நீங்கும் மேலும் நம்முடைய வலது கையில் நடுவிரல் (பாம்புவிரல்) சிறிது ரத்தம் (ஒரு புள்ளி ரத்தம்) எடுத்து பால் முட்டை ஏதாவது ஒன்றில் கலந்து பாம்பு இருக்கும் புற்றில் வைத்து வணங்கி வந்தால் ராகு தோஷம் நீங்கும் (இது கேரளாவில் மாந்திரிக முறையில் தோஷம் கழிக்கும் முறை) கேரளாவில் உள்ள மக்கள் இதுமாதிரி அதிகம் பேர்கள் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பதினெட்டு சித்தர்களில் புலிப்பாணி சித்தர் நாகதோஷ பரிகாரம் நீங்க 300 வழிமுறைகள் கூறியுள்ளார். மேலும் புலிப்பாணிசித்தரின் குருவான போகர் சித்தர் வைத்திய நுல்களிலும் ராகுதோஷம் நீங்க வைத்திய முறையில் 47 வகை வழிமுறைகள் கூறியுள்ளார்;. மேலும் பழைய ஜாதக பாரிஜாதம் பலதீபிகை பிருகத் ஜாதகம் பராசர ஹோரை பஞ்ச சித்தாந்தம் நந்தி வாக்கியம் சுகப்பிர்ம்ரிஷி வாக்கியம் நவக்கிரகத்ர்க்கம் சிகாமணிகள் சிந்தாமணிகள் போன்ற பழம்பெரும் நுல்கள் பின்னால் எழுந்த நாரதீயம் ஜாதக (தமிழ்) பாரிஜாதம் ஜாதக சந்திரிகை எனும் நுல்கள் மகாகவி காளிதாஸ் எழுதிய காண்டம் போன்ற அனைத்து நுல்களிலும் பலமுறைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன.

ஒருவன் பல குரல்களில் (விகடகவி) பேசும் திறன் பல்லாண்டுவரை நீடித்த அரசியலில் நீணடகாலம் இருக்க (தலைவர்கள்) கலைத்துறையில் விதவிதமான வேஷங்கள் (நடிகர்கள்) செய்வதற்கும் (ராகுவிற்கு வேஷகாரன் என்ற சிறப்பு பெயரும் உண்டு) ராகுவின் அருள் வேண்டும். ராகுவைப் போல் கொடுப்பாரில்லை. என்று சொல்லக்கூடிய அந்த ராஜ யோகத்தை வழங்க கூடிய ராகுவை வணங்கி அருள் பெருவோம். வாழ்க வையகம!; வாழ்க வளமுடன்!

Read more...

புழுவை பாம்பாக்கும் மந்திரம்; பேரிடராக்கல்

Saturday, May 15, 2010

ஒருவர் ஒரு பூதக்கண்ணாடி(உருப்பெருக்கும் கண்ணாடி) வாங்கினார்.அதனூடாக ஒரு சிறிய புழுவைப் பார்த்தார்.
அந்த புழு பெரிதாக ஒரு பாம்பு போலத்தெரிந்தது.
"ஐயோ பாம்பு '' என்று பதகளித்து கத்தி மயக்கம்போட்டு விழுந்தார்.
நீங்கள் சிரிக்கக்கூடும். இதென்ன முட்டாள்தனம் என்று யாராவது உலகத்தில் இப்படி இருப்பார்களா என்றும் யோசிப்பீர்கள்.
ஆனால் உலகத்தில் நிறையப்பேர் இப்படி  இருக்கிறார்கள்.
பாருங்கள் இந்தப்பெண்ணை. கடுமையாக பரீட்சைக்கு படிக்கிறாள்.
பிள்ளை வடிவாய் படி நீ முதலாவாதாய் வரவேணும். நான் என் மகள் இந்தமுறை இந்த மாகாணத்திலேயெ முதலாவதாய் வருவாள் என்று சொல்லியிருக்கிறேன். இது அம்மா டீச்சர்.
" பிள்ளை இது ஒரு முக்கியமான பரீட்சை இதுதான் உன்னுடைய எதிர்காலம்'' இது அப்பா.
அந்தப்பிள்ளைக்கு படித்துக்கொண்டிருக்கும்போது தெறித்து விழுந்த எண்ணம் இது.
இந்தப் பரீட்சையில் நான் பெயிலானால்?
''கடவுளே என்னால் நினைச்சுப்பார்க்கமுடியவில்லை.அம்மா வெளியிலை தலை காட்டமுடியாது.அப்பாவுக்கு ஏமாற்றம்.என்னுடைய எதிர்காலமே இருண்டு போய்விடும்.நான் எப்படி வெளியில் தலைகாட்டுவது. இந்தப்பரீட்சை ஒரு வாழ்வா சாவா? போராட்டம்''
அந்தபெண்பிள்ளைக்கு பரீட்சை பீதி வந்துவிட்டது.மனதில ஒரு பதற்றம்.பிறகென்ன எல்லாம் மறந்துவிட்டது போன்ற ஒரு உணர்வு.
நான் வேதனையோடு சொல்லுகிறேன் இந்த பதற்றங்களால் பரீட்சைகளை தவற விட்டு பல்கலைகழகங்களுக்கு செல்லாத மிகத்திறமையான  பலர் இருக்கிறார்கள்.
என்ன நடக்கிறது இங்கே ?
பரீட்சையில் தோல்வி என்பது சகஜம். ஆனால் இங்கே அந்த தோல்வி ஒரு பெரிய வீழ்ச்சியாக மனம் உருவகித்து விடுகிறது.

அதாவது சிலருடைய மனத்தில் இப்படி பூதக்கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கிறது. இவர்கள் சிறு அழிவை பேரழிவாக எண்ணுவார்கள். இடரை பேரிடராக எண்ணிக்கலங்குவார்கள். மற்றவர்களையும் கலங்கடிப்பார்கள்.
இது ஒரு வகை தவறான சிந்தனைப்பழக்கம். இதை பேரிடராக்கல் அல்லது              பேரழிவாக்கல்catastrophizing என்று சொல்லுவார்கள்.
இந்தச்சிந்தனைப்பழக்கமுள்ளவர்களின் மனம் சட்டென்று பயங்கரமானதுக்கு தாவிவிடும்.
 
 
சிற்றலையை சுனாமியாக்கிவிடுவார்கள்.
அதாவது ஒரு சிறு தோல்வியை தாங்கமுடியாததோல்வியாக நினைத்துக்கொள்வார்கள்.சிறிய தவறை பெருந்தவறாக எண்ணிவிடுவார்கள். இது அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை பாதித்துவிடும்.
   அந்தப்பெண் பரீட்சைக்கு முதலேயே தோல்வியை நினைத்ததுமாத்திரமல்லாது அதை பேரிழப்பாகவும் உணரத்தொடங்கியதனால்  பயத்தினால் பரீட்சைக்கு தயார்ப்படுத்தமுடியாமல் போய்விடுகிறது.
அன்றாட வாழ்வில் சின்னச்சின்ன விஷயங்களிலெல்லாம் நாம் இந்த பூதக்கண்ணாடியைப் பாவித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
 நாம் விடும் சின்னத்தவறுகளை பெரிதாக்கி பயந்து மறுகிக்கொண்டோ , நடக்கப்போவதை நினைத்து நடுங்கிக்கொண்டோ தோல்விகளில் சிக்கி நசியுண்டு நலிந்துபோயோ காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.

நம் எண்ணங்களை அவதானித்தால் போதும். அட சின்ன விஷயத்தை பெரிதாக்குகிறேனே என்று புரியும். கடந்து வந்த வாழ்க்கையை திரும்பிப்பார்த்தால் இதை விட பெரிய முதலையின் வாயிலிருந்து தப்பிவந்திருப்போம் என்பது தெரியும்.
நிகழ்காலத்தில் உள்ள கடமைகளை எதிர்காலம் பற்றிய பதற்றமில்லாமல் செய்தால் எதிர்காலம் நன்றாக அமையும்.

'' என் கணவருக்கும் இப்படி பிரச்சனை இருக்கிறது''
''  அடடே அப்படியா? அப்படி என்னதான் செய்கிறார் '''

'' சோற்றுக்குள் இருக்கும் கல்லை பூதக்கண்ணாடி வைத்துப்பார்த்து இந்தக்கல் தொண்டையில் சிக்கியிருந்தால்,.. என்று பதைபதைத்துப்போகிறார்'' 
 

Read more...

தீபத்திருநாள்

Wednesday, May 12, 2010

இந்த ஆண்டு டிசம்பர் முதல் நாள் கார்த்திகை தீபத்திருநாள் வருகிறது. மிகவும் தொன்மை வாய்ந்த இத்திருநாள், தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது. கி.மு 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகைத் தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

இத்தீபத்திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த தீபம், ஐந்தரை அடி உயரமும், ஐந்தடி நீளமும் உள்ள ஒரு இரும்பு கொப்பரையில், 2000 கிலோ நெய்யை விட்டு, முப்பது மீட்டர் காடாத் துணியைச் சுருட்டி அதைத் திரியாகப் போட்டு அதன் மேல் இரண்டு கிலோ கற்பூரத்தை வைத்து ஏற்றப்படும். இந்த மகாதீபம் மலையைச்சுற்றி 35 கிலோமீட்டர் தூரம்வரை தெரியும்.

இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்தத் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலோனோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள். நகர்புறங்களில் இட நெருக்கடி இருந்தாலும், பால்கனி, மொட்டைமாடி சுவர், மாடிப்படிகட்டுகள், சன்னல் விளிம்புகள் என்று எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் விளக்கேற்றி வைப்பார்கள். பாரம்பரியமாக களிமண்ணால் செய்யப் பட்ட சிறு அகல் விளக்குகள்தான் ஏற்றி வைக்கப்படும். ஆனால் இப்பொழுது வேறுவகை விளக்குகளும், அலங்கார மெழுகுவத்திகளும் ஏற்றப்படுகின்றன.

இத்திருவிழாவின் இன்னொரு சிறப்பம்சம் "சொக்கப்பனை கொளுத்துதல்". கோவிலுக்கு அருகே, திறந்த வெளியில், ஒரு காய்ந்த மரத்துண்டை (அனேகமாக பப்பாளி மரத்தண்டு) நிறுத்தி அதனைச் சுற்றி காய்ந்த பனை மட்டைகளைக் கட்டி வைப்பார்கள். இதற்கு சொக்கப்பனை என்று பெயர். சாயங்காலப் பூஜை முடிந்து விளக்கேற்றிய பின்னர், கோவில் அர்ச்சகர் வெளியே வந்து, சொக்கப்பனைக்கு தீபாராதனைக் காட்டி அதைக் கொளுத்தி விடுவார். பனை மட்டையில் தீ பிடித்ததும் படபடவென்று ஒசையுடன் வெடித்துக் கொண்டே கொழுந்து விட்டு எரியும். இதற்கு புராணங்களில் வெவ்வேறு கதைகள் கூறப்பட்டிருந்தாலும், ஒருவேளை இதுதான் அந்நாளைய பட்டாசோ??

இதனால் தானோ இன்னமும் இத்திருநாளன்று சிறுவர்கள் பட்டாசு (பெரும்பாலும் தீபாவளிக்கு வாங்கியதில் மிச்சம் பிடித்தது) வெடித்து மகிழ்கிறார்கள்.

ஏற்றப்பட்ட விளக்குகள் அனைத்தும் தீயனவைகளைத் தடுத்து நல்லனவைகளைத் தரும் என்பது நம்பிக்கை. அகல் விளக்கோ அல்லது அழகிய சிறு மெழுகுவத்தியோ, இருண்ட மாலை வேளையில் வரிசை வரிசையாய் ஒளிரும் இத்தீபங்களைக் காண்பதே கொள்ளை அழகு.

இத்திருநாளில் ஏற்றப்படும் ஒவ்வொரு தீபமும் நம் வீட்டிற்கு மட்டுமின்றி அனைவர் வாழ்விலும் ஒளி பரவ செய்யட்டும்.

Read more...

அம்மான்னா சும்மாவா

Tuesday, May 11, 2010

 
 
 
 படம் ஒன்றே போதுமே... பல்லாயிரம் சொல் வேண்டுமா...?
***************************************************************************

நான் எப்பவும் ஆணாதிக்கவாதின்னு வெளியா நல்லா நடிச்சு நல்ல பெயர் எடுத்தாலும் வீட்டிலே இருக்கும் போது அந்த ஆணாதீக்கம் அப்ப அப்ப நைசா எட்டி பார்ப்பதும் அடுத்த சில மணி நேரத்திலே நான் திடீர் திடீர் என திருந்துவதும் நடந்து கொண்டிருக்கின்றது ஒரு 13 வருஷமா.
அப்படித்தான் சென்ற டிசம்பர் மாதம் ஊரில் இருந்த போது நம்பி நட்ராஜின் லீலைகளை ரசித்து பார்த்து கொண்டிருந்தேன். அப்போது "என்ன ரசிப்பு வேண்டி கிடக்கு, இவனை ஒரு மணிநேரம் பார்த்துகிட்டா நான் சமைச்சு முடிச்சுடுவேன். ரொம்ப ஹாயா உட்காந்து ரசிச்சுகீட்டு இருக்கீங்களே" அப்படின்னு அபிஅம்மா கேட்டதும் நான் உடனடியாக சொன்ன பதில் "அய்யே நாங்க காஷ்டப்பட்டு சம்பாதிச்சு போடுவோம். நீங்க நகை "நட்டு"ன்னு வாங்கி போட்டுப்பீங்க. ஆனா நட்டுவை மாத்திரம் பார்த்துக்க முடியாதா, அடுத்த ஜென்மத்தில் நான் உனக்கு பொண்டாட்டியாவும் நீ எனக்கு புருஷனாகவுமிருந்துப்போம் டீல் ஓக்கேவா ஏன்னா ஏழேழு ஜென்மத்துக்கும் நாம தான் ஜோடி நம்பர் ஒன்" அப்படீன்னு கேட்க "அடடா ஆண்டவா! இதூவே ஏழாவது ஜென்மமா இருக்கனும்"ன்னு முனகி கிட்டே போயிட்டாங்க!
விடுவனா நான் உடனே போய் "அட நம்ம நட்டுவை நான் இன்னிக்கு முழுக்க பார்த்துகிட்டு அபியையும் பார்த்து கிட்டு சமையலையும் பார்த்து கிட்டா உன் தோல்விய ஒத்துகிறியா" ன்னு கேட்ட அடுத்த நிமிஷம் நட்டு என் கைக்கு வந்துட்டான். வந்து உட்காந்து என்னை திரும்பி பார்த்த போதே ஒரு நக்கலாக பார்த்தது வயிற்றில் புளி கரைத்தது. அபி கூட வெள்ளை கைக்குட்டை காட்டிடலாம்பா என சொன்னாள். விடுவனா நான் சவால்னு வந்துட்டா குதிச்சிடுவேன்ல.

நட்டுவை கையில இருந்து இறக்கி விட்டு விட்டு கிச்சன் பக்கம் போனேன். சரி வெங்காயம் கத்தி எல்லாம் எடுத்து கிட்டு இருக்கும் போதே நட்டு ஓடி போய் மாடி படியில் தாவி தாவி ஏறி கொண்டிருந்தான். நான் ஓடி போய் பிடித்து கொண்டு அந்த மாடி படியின் தற்காலிக மர கேட்டை மூடி பூட்டி விட்டு அவனை கொண்டு வந்து என் பக்கத்தில் வைத்து கொண்டு பாத்திரம் எல்லாம் எடுத்து கொண்டிருக்கும் போதே எனக்கு பின் பக்கம் ஏதோ சுடுவது போல இருந்து என்னன்னு திடீர்ன்னு திரும்பி பார்த்தா துப்பாக்கி மாதிரி இருந்த கேஸ்லைட்டர் வச்சி என்னை சுட்டு கிட்டு இருந்தான். பின் தொடை பழுத்து போச்சு. அந்த லைட்டர் ஸ்பார்க் வராது 1 இன்ச் அளவு நெருப்பு வரும். அய்யய்யோ ன்னுஅலறி அதை பிடுங்கி வைத்து விட்டு பாத்திரம் கழுகி கொண்டிருந்தேன். என்னவோ சர சரன்னு சத்தம் கேட்கவே நம்ம நட்டு சரசரன்னு கிச்சன் கதவை அறுத்து கொண்டிருந்தான். அய்யோ தேக்கு கதவுடா ன்னு கத்திகிட்டே "அய்யோ இந்த கத்தியை அவன் கைக்கு எட்டுவது போல யார் வைத்தது"ன்னு கத்தினேன். "நீங்க தான இப்ப வச்சீங்க"ன்னு ரூம் உள்ளே இருந்துசத்தம் வந்தது.
சரின்னு புளி கரைசலை கீழே வைத்து விட்டு அடுத்த வேளை பார்க்க ஆரம்பிச்ச போது பொலக்ன்னு ஒரு வித்யாசமான சத்தம். அத்தனை கரைசலையும் எடுத்து தலையில் கொட்டி கொண்டு நக்கிகிட்டு என்னை பார்த்து ஒரு சிரிப்பு வேற. எனக்கோ செம கடுப்ப்பு. ஓடி போய் ரூம் கதவை லைட்டா ஒரு உதை விட்டுட்டு (நம்ம வீட்டு கதவுல்ல அதான்) சரி சமையலுக்கு முன்ன நட்டுவை குளிப்பாட்டிடலாம்ன்னு பாத்ரூம் எடுத்து போனேன். அபி தான் நம்ம அஸிஸ்டண்ட்.

ஒரு வழியா புளிகரைசலை எல்லாம் கழுவி அவனுக்கு டிரஸ் எல்லாம் போட்டு முடித்து வந்தா கிச்சன் முழுக்க ஒரே புகை. ஏன்னா வெங்காயம் தக்காளி, கடுகு உ.பருப்பு எல்லாம் ஒரு இன்ச் அடிபிடித்து போய் எல்லாம் போச்சு. அந்த நாற்றம் கேட்டு வெளியே வந்தாங்க அபிஅம்மா.

திரும்ப டீலிங்ல கொஞ்சம் மாற்றம்! அதாவது சமையல் மாத்திரம் அவங்க. நட்டுவை பார்த்துப்பது நான். (ஏன்னா அவங்களுக்கு சாப்பாடு இல்லாம போயிடுமே அதனால் தான் போல இருக்கு) பின்ன ரொம்ப சந்தோஷமா நான் நட்டுவை மாடி கேட் திறந்து விட்டு ஏற சொன்னா அவன் என்னை விட 10 மடங்கு அதீக வேகத்தில் ஓட்டம். என்னால முடியலை. மூச்சு வாங்குது. சரி மாடி விளையாட்டு போதும்னு நினைச்சுகிட்டு அபிகிட்ட மெதுவா கேட்டேன்"அவன் எப்ப தூங்குவான்" அப்படின்னு. அப்பா அவனை வண்டில வச்சுகிட்டு வேகமா போனா அந்த எதிர் காத்துல நல்லா தூங்குவான் அப்படின்னு சொன்னா.
அட அபின்னா அபிதான்! என்னமா ஒரு பெரிய குடும்ப ரகசியத்தை சொல்லிட்டான்னு நினைச்சு சந்தோஷப்பட்டு வண்டிய எடுத்து அவனை வச்சிகிட்டு அவனுக்கு அப்ப முன்னாடி நிற்க தெரியாது. அதனால எனக்கும் அபிக்கும் எனக்கும் நடுவே உட்கார வச்சு போய் கிட்டே இருக்கேன். 1 நிமிஷம் 1 தடவை தூங்கிட்டானான்னு கேட்டுகிட்டே. இல்லப்பா சில சமயம் 1 மணி நேரம் ஆனா கூட தூங்க அடம் பிடிப்பான்"ன்னு சொன்ன போது பக்குன்னு ஆகிடுச்சு.
ஆனா அடுத்த 5 வது நிமிஷம் தூங்கிட்டான். அங்க தான் விதி விளையாடுச்சு. பெட்ரோல் தீர்ந்து வண்டி நின்னு போச்சு. அது வீட்டிலே இருந்து அரை கிலோ மீட்டர். அங்க எந்த பெட்ரோலுக்கும் வழி இல்லை. சரீன்னு ஒருத்தர் வீட்டிலே வண்டிய நிப்பாட்டி விட்டு அவனை தூக்கிகிட்டு நாக்கு தள்ள நடந்து வந்து சேரும் போது வீட்டை அடையும் போது நாக்கு தள்ளி போயிடுச்சு.

அப்பாடா வந்து சேர்ந்தாச்சு எப்படியும் 2 மணி நேரம் தூங்க மாட்டானா என நான் நினைத்து கொண்டிருக்கும் போதே "ஹவ் ஈஸ் தட்"ன்னு ஒரே கோரசா எங்க ஐபிஎல் திருவள்ளுவர் ராயல்ஸ் கத்தினதுல முழிச்சுகிட்டான். வேற வழி! கீழே இறக்கி விட்டேன். ஒரே ஓட்டம். மெதுவா அபி கிட்ட கேட்டேன். "வண்டில போனா தூங்குவான்ன்னு சொன்னியே"
அதுக்கு அவ "ஆமாம் சொன்னேன் நடந்துச்சா இல்லியா
"இப்ப முழிச்சுகிட்டானே"
"கிரிக்கெட் சத்தம் கேட்ட முழிச்சுப்பானா அப்படின்னு நீங்க கேட்கவே இல்லையே"இது அபி!

நம்பினா நம்புங்க மதியம் 12 வரை நான் ரொம்ப சோர்ந்து போயிட்டேன். அவன் கூட. காலை சாப்பாடும் சாப்பிடலை. அதுக்குள்ள வீட்டுக்காரம்மா வாசல்க்கு வந்து வாங்க சாப்பிடலாம்ன்னு சொன்ன வார்த்தை அமிர்தமா இருந்துச்சு. இவனை அந்த டீம்ல இருந்து பிச்சு எடுத்துகிட்டு வந்து வீட்டிலே விட்டா ஒரே கத்தல். பின்ன வெளியே போய் திருவள்ளுவர் ரைடர்ஸ் கிட்ட "டேய் போங்கடா நான் பேட் வாங்கி தரேன்"ன்னு கெஞ்சி அவனுங்க போன பின்ன அழகா சாப்பாடு பறிமாறும் வேலை வந்துச்சு. அபிஅம்மா சாப்பாடு மட்டும் தான் செய்வேன்னு சொன்னாங்களா? அப்ப நான் தான் பறிமாறும் வேளை!

பறிமாறி முடிச்சு சாப்பிட ஆரம்பிக்கும் போது தம்பி முகம் ஒரு மாதிரியா விளக்கென்னெய் குடிச்ச மாதிரி ஆச்சு. "ஏண்டி பாப்பா எப்படி போகுது அவன் முகம்!
"அப்பா மணி என்ன"

"இது என்ன கூத்து இதுக்கும் மணிக்கும் என்ன சம்மந்தம்"

"இல்லப்பா அம்மா 12 மணிக்கு சாப்பிட ஆரம்பிப்பாங்க. அப்போ பார்த்து தான் தம்பிக்கு ஆய் வரும். பாவம்ப்பா அம்மா அப்படியே போய் அவனை சுத்தம் பண்ணிட்டு அப்படியே சாப்பாடை கொட்டிடுவாங்க"
"என்னடா அபி! நீ எப்பவாது ஹெல்ப் பண்ணுவியா"

அதுக்கு அபிஅம்மா "அவ சின்ன குழந்தை தானே கொண்டு போய் பைப் கீழே நிக்க வச்சு பிரஷர் பைப்ல காரை கழுவுவது போல கழுவுவா! ஏன்னா அவளும் ஒரு வருங்கால அன்னைதானே"
"என்ன கொடுமை சாரி! குழந்தைன்னா ஆய் எல்லாம் போகுமா"
அப்போ வீட்டில் வேலை செய்யும் ஒரு அம்மா வந்தாங்க!

"தம்பி இந்த குழந்தை மட்டும் இல்லை அது என்னவோ நான் பார்த்த எல்லா குழந்தையுமே அம்மாவை சாப்பிட விட்டதில்லை போங்க"

மெதுவா சமாதானம் ஆகி அபிகிட்ட கேட்டேன்!

"அபி இப்படியெல்லாமா செய்வாங்க குழந்தைகள்னா! சரி அவனை தூங்க வைக்க அம்மா வண்டிய எடுத்துகிட்டு சுத்துமா"

"நோ நோ அப்பா இது அப்பா பார்முலா! அம்மா இங்கா கொடுத்து தூங்க வச்சிடுவாங்க! இல்லாட்டி ரெண்டு அடி போட்டா அழுதுகிட்டு தூங்குவான்"

"அந்த லைட்டர் கத்தி எல்லாம் எடுக்கிறானே"
"நீங்க தானே கத்தி லைட்டர் எல்லாம் அவன் கைக்கு எட்டும் படி வச்சீங்க அதல்லாம் அம்மாவுக்கு நல்லா தெரியும் எங்க வைப்பதுன்னு"

"சரி மாடி படி ஏறிகிட்டே இருக்கானே"

"அதுக்கு அம்மா அழுவது போல நடிப்பாங்க! அவன் பயந்து போய் அம்மா மடியிலே படுத்துப்பான். அந்த கேப்பிலே என்ன சமைக்க முடியுமோ ச்சமைப்பாங்க"

"இன்னும் எத்தனை ரகசியம் இருக்கு குழந்தை வளர்க்க?"

"நோ அப்பா எத்தனை ரகசியம் சொன்னாலும் உங்களால முடியாது. ஏன்னா அவன் தினுசு தினுசா அவன் பார்முலாவை மாத்துவான். அதை அம்மாவால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்"

"அபி அப்ப நீ என்ன சொல்ல வரே"
"அப்பா ரெண்டு வார்த்தையில் சொல்லவா"

"அம்மான்னா சும்மாவா "
எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

Read more...

நெஞ்சம் பதைக்க வைக்க செய்யும் புகார்

சமீபத்தில் மனதை மிகவும் பாதித்த நிகழ்வு இது. கடலூர் மாவட்ட ஒரு கிராமத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. வழக்கம் போல் அன்றிறவே முதலிரவு. மறு நாள் அந்த பெண்ணின் அப்பா தற்கொலை செய்துகொள்கிறார். காரணம் அந்த பெண் தன் உறவினர்களிடம் முறையிட்ட நெஞ்சம் பதைக்க வைக்கசெய்யும் புகார்.

அதாவது தன் முதலிரவில் தான் தனது கணவரின் நண்பர் மூலமாக வீடியோ எடுக்கப்பட்டதாக. பின்னர் அந்த வீடியோ கேசட் வெளிநாட்டு விற்பனைக்காக விமான நிலையம் வரை போய் விட்டதாகவும் அந்த மணப்பெண் தெரிவித்தார். இதை கேள்விப்படும் எந்த தந்தையும் இந்த தந்தை எடுத்த முடிவுதான் எடுப்பார் என்பது உண்மைதான்.

இதில் எந்த அளவு உண்மை என்பது விசாரனையில் இருக்கட்டும். உண்மையாய் இருக்குமேயானால் என்பது பற்றியே இப் பதிவு.

அந்தரங்கம் விற்பனை எங்கு ஆரம்பமாகின்றது? ஒரு உறவினர் மணமகளை முதலிரவுக்கு அனுப்பும் முன்பே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகிறேன் பேர்வழி என்று, அந்த பெண் மறுநாள் தன்னிடமே அவள் அவளுடைய அந்தரங்கத்தை விற்பனை செய்யவேண்டி, 'அறிவுரை' என்ற முதலீட்டை இடுகின்றாள். மறுதினம் "சந்தோஷமா இருந்தியா?" என்ற கொக்கியில் மாட்டி அந்த பெண் தன் அந்தரங்கத்தை இலவசமாக வாரி இறைக்கிறாள்.

மணமகனோ வேறு வழியில். அவனுடைய ஆண்மைதனம் பற்றிய அகங்காரம் அவனுடைய நண்பர்களிடம் பீற்றிக்கொள்ள வைக்கின்றது. இலவச கிலுகிலுப்புகள் கிடைக்கப்பெற்றவர்கள் இன்னும் இன்னும் கொக்கிகளை போட அந்த உளருவாயனோ தனக்கே தெரியாமல் தன் அந்தரங்க விற்பனையை அமோகமாய் நடத்துகிறான்.

அந்த இருவருக்குமே சொல்வதுயாதெனில் நீங்கள் விற்பனை செய்வது உங்களுக்கு மட்டுமேயானது அல்ல. உங்களை தவிர மறைமுகமாக வேறு சிலரின் மானம் சம்பந்தப்பட்டதும் உள்ளடங்கியிருக்கிறது என்பதை உணருங்கள்.

விலைமாதுவிடம் சென்று வந்தவன் கூட அவன் லீலைகளை, அகங்கார ஆண்மைதனத்தை அடுத்தவனிடம் சிலாகித்துக்கொள்ள எந்த உரிமையும் இல்லை. ஏனெனில் அவள் அவனிடம் மட்டுமே தன் மானத்தை விற்க ஊதியம் பெற்றாலொழிய இவன் வெளியே வந்து மற்றவர்களிடம் அவள் மானத்தை(மிச்சமிருப்பதை)விற்க எந்த விற்பனை உரிமையும் தரவில்லை. அப்படியிருக்கும் போது புதுமண தம்பதிகளின் இந் நடத்தை, கலாச்சார சீர்கேடு என்ற புற்று நோயின் ஆரம்ப விழாவிற்கான அழைப்பிதழே.

கிலுகிலுப்பு கிடைக்கப்பெற்றவர்கள் எப்படி வலை விரித்தாலும் உங்களுக்கு எங்கே போகிறது புத்தி?

இந்த வாய் வழி விற்பனையே வளர்ந்து ஊடகத்துறை என்றெல்லாம் கடந்து இதோ இந்த பதிவின் ஆரம்பத்தில் கண்ட கடலூர் மாவட்ட நிகழ்வெல்லாம் நடைபெறுகின்றன.

உணருங்கள் - அந்தரங்கம் புனிதமானது

Read more...

பத்து பொருத்தம்?

Sunday, April 18, 2010

திருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். ஜோதிடர் வரன்கள் இருவரது ஜாதகத்தை கணித்து உத்தமம் என்று சொன்னால் தான் மேற்கொண்டு பேசுவார்கள். இல்லையென்றால், அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள்.

அதென்ன பத்து பொருத்தம்?

ஜோதிடர் ஏதோ சொல்கிறார், நாங்களும் கேட்கிறோம் என்று தான் இந்த கேள்விக்கு நம்மில் பலர் பதில் சொல்வார்கள்.
நீங்களும் அந்த பத்து பொருத்தம் என்னவென்று அறிய வேண்டாமா?

1. தினப் பொருத்தம் : இதை நட்சத்திர பொருத்தம் என்றும் சொல்வார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.

2. கணப் பொருத்தம் : இது தான் குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம். மனைவியாக வரப்போகிறவள், கணவனாக வரப்போகிறவன் எத்தகைய குணத்தை பெற்றிருப்பான் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

3. மகேந்திரப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதனால் இந்த பொருத்தம் ரொம்பவே முக்கியம்.

4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான், திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் கொட்டும். அதனால், இதுவும் முக்கியம் தான்.

5. யோனிப் பொருத்தம் : இது மிக, மிக முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி இருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக்கூடியது இது. அதனால், இந்த பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

6. ராசிப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.

7. ராசி அதிபதி பொருத்தம் : குடும்பம் சுபிட்சமாக-சந்தோஷமாக இருக்குமா என்பது தெரிவிக்கக்கூடியது இந்த பொருத்தம்.

8. வசிய பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்படும். இல்லையென்றால் சண்டைக்கோழி தான்.

9. ரஜ்ஜூப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை உறுதி செய்யும் இந்த பொருத்தம் இருப்பது மிக மிக அவசியம்.

10. வேதைப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் தம்பதியர் வாழ்வில் சுக-துக்கங்கள் எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த பொருத்தம். இந்த பொருத்தம் ஓ.கே. என்றால் தான், பின்னாளில் வாழ்வில் பிரச்சினைகள் அதிகம் இருக்காது.

- இந்த பத்து பொருத்தங்கள் எல்லோருக்கும் வாய்ப்பது மிகவும் கடினம். இவற்றில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ ஆகிய 5 பொருத்தங்கள் தான் மிகவும் முக்கியமானவை என்கிறார்கள் ஜோதிட வல்லுனர்கள்.
 
பத்து பொருத்தம் பற்றி ஜோதிடம் இப்படிச் சொன்னாலும், அதே ஜோதிடம் இன்னொரு பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. அது தான் மனப் பொருத்தம். மனப் பொருத்தம் இருந்தால் மாங்கல்ய பொருத்தம் உண்டு என்பது ஜோதிட கருத்து. இதை பலர் கண்டு கொள்வதே இல்லை.

பத்து பொருத்தங்களை பார்க்கும் நாம் மனப் பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அதாவது, திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கு ஆணை பிடித்திருக்கிறதா என்றும், ஆணுக்கு பெண்ணை பிடித்திருக்கிறதா என்றும் கேட்டு உறுதி செய்வது அவசியம். அதன் பின்னர் தான் திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும். இதை ஜோதிட சாஸ்திரமே வலியுறுத்துகிறது.

Read more...

முதுகு வலிக்கு செலவே இல்லாத வைத்தியம்

Tuesday, April 6, 2010

டாக்டர், எனக்கு 34 வயதாகிறது. முதுகுவலியால் கஷ்டப்படுகிறேன். டூ&வீலர் இல்லாமல் என்னால் வேலை பார்க்க முடியாது. நண்பர்களோ, வண்டி ஓட்டியதால்தான் இந்த முதுகு வலி என்கிறார்கள். முதுகு வலியை குணப்படுத்த ஏதாவது பயிற்சிகள் உள்ளதா?

- கே.எம். மஞ்சுநாத், பெங்களூர்.

டாக்டர் ஜெயலஷ்மி: ''டூவீலர் ஓட்டுவது, கம்ப்யூட்டர் முன்பாக அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வது போன்றவற்றால் பலருக்கு இப்போது முதுகு வலி ஏற்படுகிறது.
கைகளைப் போன்றே நமது கால்களிலும் உடலின் பிரதிபலிப்புப் புள்ளிகள் அமைந்துள்ளன. பாதத்தின் பக்கவாட்டுத் தோற்றம் நமது முதுகுத் தோற்றத்தை போலவே இருக்கிறது.
பாதத்தில் உள்ள புள்ளி களை வரிசையாக அழுத்தும் போது, எந்த புள்ளிகளில் அதிக வலி ஏற்படுகிறதோ, அந்தப் புள்ளிக்குரிய முதுகுப் பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கண்டு கொள்ளலாம்.
காலை, மாலை இரு வேளைகளும் இந்தப் புள்ளிகளில் 14 தடவை அழுத்தம் கொடுத்துத் தளர்த்தி வரவும்.
ஒரு கட்டத்தில், காலில் உள்ள புள்ளிகளை அழுத்தும்போது, வலி இருந்த இடத்தில் வலி குறைந்திருப்பதை உணர்வீர்கள். அப்போது, முதுகு வலியும் நன்றாகவே குறைந்திருக்கும்.

Read more...

உஷார்! உங்களுக்கும் இது ஒரு பாடம்!

சென்னையின் புறநகர்ப் பகுதியிலிருக்கும் பிரம்மாண்டமான மருத்துவக்கல்லூரி மருத்துவமனை..
இலவச மருத்துவ சிகிச்சைப் பகுதியில், இரண்டாம் தளத்திலிருந்த பெண்கள் வார்டின் கடைசி வரிசையில் முதல் கட்டில்.. கட்டில் சைஸுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாமல், சிறிய மைனாக்குஞ்சு போல உட்கார்ந்திருந்தார் அந்த அம்மையார். வயது 86.

''
மணி என்ன இப்போ? ஆறே முக்கால் ஆச்சா? அப்ப, இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பாடு கொண்டுவந்துடுவான்..!'' என்று மூன்றாவது தடவையாக சொல்லிவிட்டு, அந்த வார்டின் வாசல்புறம் பார்த்துவிட்டு நம்மைப் பார்த்துச் சிரித்தார். ஆங்காங்கே சில பற்கள் விழுந்திருக்க, குழந்தையின் சிரிப்புப் போன்றிருந்தது அது.

புன்னகைக்கத் தோன்றாமல், வயிற்றைப் பிசைந்தது நமக்கு!மூப்பு காரணமாகக் குறுகியிருந்த உடலைவிடப் பெரிய சைஸிலான நைட்டி.. கால்களுக்குக் கீழே விழுகிறது என்பதால் இடுப்பில் கொஞ்சம் சுருட்டி, ஒரு நாடாவை வைத்துக் கட்டி விடப் பட்டிருந்தது. கண்ணாடிக்குப் பின் கருவிழிகள் கூர்மையாக போவோர் வருவோரை அலசியபடியிருக்க, வாய் அவர்களைப் பற்றியோ, அந்த வார்டு, அதன் தலைமை மருத்துவர், டியூட்டி நர்ஸ்கள், சக படுக்கை நோயாளிகள் பற்றிய ஏதாவது ஒரு தகவலை உதிர்த்தபடி இருந்தது.
கட்டில் அருகிலேயே வாக்கர்! அதில் காயும் ஒரு நைட்டி, ஒரு துண்டு. அவரருகே ஒரு டைரி, ஒரு பேனா.. ஒரு மொபைல். இடதுபுறமிருந்த வெள்ளை நிற குட்டி அலமாரியில் சில பிஸ்கெட் பாக்கெட்டுகள், இரண்டு ஆப்பிள், ஒரு தட்டு, இரண்டு டம்ளர்.. தண்ணீர் (கூல்ட்ரிங்க் வந்த) பாட்டில்கள்..
இந்த அம்மையார், ஒரு காலத்தில் இலக்கிய உலகின் முடிசூடா ராணியாக விளங்கியவர் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?கணவருக்கு மிக உயர்ந்த அரசுப் பணி. கை நிறைய சம்பளம். இந்த அம்மையார் எழுதிக் குவித்ததும் அதன் மூலம் அவர் பெற்ற விருதுகளும் ஏராளம்.. ஏராளம்! இன்று பல்கலைக் கழகங் களில்கூட அவருடைய எழுத்துக்கள் பாடமாக இருக்கின்றன. சென்னையில் சொந்தவீடு, வங்கியில் கணிசமான இருப்பு, நகைகள், வீடு கொள்ளா விருதுகள் என ராணி போல வளைய வந்தவர்தான்.. ஆனால், உறவினர்கள் மேல் வைத்த அதீத நம்பிக்கையும், வளர்ப்பு மகன் மேல் கொண்ட அளவற்ற பாசமும் அவரை இப்படி ஒரு பரிதாப நிலைமைக்கு ஆளாக்கிவிட்டது.
நாம் அவரை 'அம்மா' என்றே அழைப்போம். அம்மாவுக்கு பூர்விகம் தஞ்சாவூர்ப் பக்கம். ஆனால், திருமணத்துக்குப் பிறகு, கணவருக்கு அடிக்கடி மாற்றல் வரும் உத்தியோகம். புதிய இடம், புதிய சூழல், புதிய மனிதர்கள் என்றால் அம்மாவுக்கு அல்வா சாப்பிடுவது போல! அந்த சூழலையும் அந்த மனிதர்களையும் தனது அடுத்த கதையிலோ, நாவலிலோ பதிவு செய்துவிடுவார். இப்படி, மனைவிக்கு பிடிக்கும் என்பதாலேயே யாருமே போக விரும்பாத மலைப்பிரதேசங்கள், கிராமங்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் என்றாலும்கூட கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட்டுவிடுவார் கணவர். அப்படி ஒரு காதல் வழியும் தம்பதி!
அவர்களுக்கு ஒரே குறைதான்! திருமணமாகி ஆண்டுகள் பல ஆகியும், அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. முற்போக்குக் கருத்துக்களும் பெண்ணுரிமைவாதியுமான அம்மா, அதை ஒரு சாதாரணமான விஷயமாக எடுத்துக் கொண்டார். அதிகம் கவலைப்படவோ, கோயில், பிரார்த்தனை என்று போகவோ செய்யவில்லை. யதார்த்தத்தை அது வரும் போக்கிலேயே எடுத்துக்கொண்டு வாழ்ந்தனர்.
அம்மாவுக்கு சகோதர, சகோதரிகள் அதிகம். அவர்களின் குழந்தைகளுக்குப் பிரியமான அத்தையாக, சித்தியாக இருந்தார். தனக்குப் பிள்ளை இல்லாத குறை தீர, உடன்பிறந்தவர்களின் குழந்தை களைக் கொஞ்சி மகிழ்ந்தார். அதில் ஒரு குழந்தை இவரிடம் அதிகமான ஒட்டுதலுடன் வளர்ந்தது. இவர்கள் வீட்டிலேயே, வளர்ந்து பெரியவனாகி, வேலைக்கும் போனார் அந்த வளர்ப்பு மகன். தன்னுடைய பாசம் முழுவதையும் அந்த மகன் மீது கொட்டி வளர்த்தார் அம்மா.
ஆனால், அத்தனை பாசமும் மிகப்பெரிய கேள்விக் குறியாக நின்றது, எட்டு வருடங்களுக்கு முன்பு அவருடைய கணவர் இறந்தபோது!
அம்மாவின் கணவர் இறந்தபோது, வந்த ஜனக்கூட்டம் போனபோது வீடு 'வெறிச்' என்றானது. உறவினர்களும் போனபிறகுதான், அம்மாவுக்கு 'தான் தனிமரமாக' நிற்பது உறைத்தது. என்ன எழுதி என்ன பயன்? அவருடைய தனிமையைப் போக்க எதுவுமே உதவவில்லை. 'சொந்தங்கள்தான் இருக்கிறதே!' என்று அண்ணன், தம்பி, அக்கா, தங்கை எல்லோருக்கும் போன் செய்தபோது.. அவர்கள் சொன்ன பதில் -

''
அவ்வளவு பெரிய வீட்ல நீ மட்டும் இருக்காத.. யாராவது வந்து, உன்னை ஏதாவது பண்ணிட்டு, இருக்கறதை கொள்ளையடிச்சிட்டுப் போயிடப் போறாங்க! வீட்டை வித்து, பேங்க்&ல போட்டுட்டு எங்க வீட்டுக்கு வந்துடு. நீ எங்க கூடவே இருந்துக்கலாம்!''
அப்புறம் நடந்ததெல்லாம் இவர் கைமீறிய விஷயங்கள்தான்!

மூன்று கிரவுண்டில் இருந்த அந்தப் பெரிய வீடு.. அம்மாவும் அவருடைய கணவரும் பார்த்துப் பார்த்துக் கட்டிய கனவு மாளிகை.. அம்மாவின் எழுத்துக்களுக்கு உயிர் தந்த அதன் மலர்த் தோட்டம்.. விலை பேசப்பட்டது.
வீட்டை விற்ற பணத்தை அக்கவுன்ட்டில் போட்டார்கள். வாங்கிய பார்ட்டிக்கு வீட்டை ஒப்படைக்கும் முன்பு, மாபெரும் கூட்டமாகத் திரண்டு வந்தனர் சொந்தங்கள். ''அத்தை.. இந்த வெள்ளிப்பிடி போட்ட வாக்கிங் ஸ்டிக் மாமாவோடதுதானே! நான் வச்சுக்கறேன்..'' என்று ஒரு மருமகள், ''பெரீம்மா.. இந்தத் தங்க முலாம் பூசின நடராஜர் சிலை, உனக்கு அந்த இலக்கிய விழால கொடுத்ததுதானே! இந்த மாதிரி ஒரு சிலையைத்தான் எங்க பூஜை ரூம்க்காக ரொம்ப நாளாத் தேடிண்டிருக்கார் இவர்!'' என்று ஒரு மகள்.. இப்படி ஆளாளுக்கு கைக்குக் கிடைத்ததை எடுத்துக் கொண்டு போக.. வேண்டாவெறுப்பாக அம்மாவைத் தன்னோடு அழைத்துச் சென்றார், வளர்ப்பு மகன். ஆனால், அந்த வளர்ப்பு மகனும் கடைசியில் அநாதரவாக விட்டதுதான் கொடுமை!
அப்படி, இப்படி என்று ஒவ்வொரு வீட்டிலுமாக அம்மாவைப் போட்டு இழுத்தடித்து, கடைசியாக மீண்டும் வளர்ப்பு மகன் வீட்டுக்கே வந்தபோது... அங்கே அழுது வீங்கிய கண்ணும் முகமுமாக வரவேற்ற மகனும் மருமகளும், ஒரு பெரிய 'சோகக் கதை'யை எடுத்து விட்டிருக்கிறார்கள். தங்களின் பிசினஸில் பயங்கர நஷ்டம் என்றும், கடன் தொகை 98 லட்சமாக உயர்ந்துவிட்டதென்றும், உடனே கட்டவில்லை என்றால், குடும்பத்தோடு கம்பி எண்ண வேண்டுமென்றும்.. கதாசிரியருக்கே கதை சொல்லியிருக் கிறார்கள்.
அப்பாவி அம்மாவுக்கு பாசம் கண்களை மறைத்தது. என்ன ஏதென்று கூடக் கேட்காமல், தன் பேங்க பாலன்ஸ், நகைகள் எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார்.
அதன் பிறகுதான் கொடுமையான க்ளைமாக்ஸ்!

'
கடன்களை செட்டில் செய்துவிட்டாலும், பெருத்த அவமானம் ஏற்பட்டு விட்டதால் இந்த ஊரில் இனி இருக்க முடியாது' என்றும் 'தாங்கள் ஊரை விட்டே போகப் போவதால், தங்களால் இனி அம்மாவை வைத்துப் பராமரிக்க இயலாது' என்றும் அந்த வளர்ப்பு மகன் நீலிக்கண்ணீர் வடிக்க.. கரைந்து போனார் அம்மா!
அதுதான் சாக்கு என்று அவரை முதன் முதலாக முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட்டிருக்கிறார்கள்.

''
கேக்காத.. அந்தக் கண்றாவிக் கதையெல்லாம் கேக்காத.. என் பணம், நகை போகட்டும்.. அதெல்லாம் யாருக்கு வேணும்? ஆனா.. நான் உயிரா நேசிச்ச என் புத்தகங்கள்.. அற்புதமான என் லைப்ரரி.. என் திறமைக்கு கிடைச்ச அவார்டுகள்.. மெடல்கள்.. எல்லாம் இப்போ எங்கே இருக்குன்னுகூட எனக்குத் தெரியாது.. எனக்கு சொத்துனு.. இதோ இந்தக் கட்டிலைச் சுத்தி இருக்கற சாமான்கள்தான்!'' என்று அவர் கதறியபோது.. காணச் சகிக்கவில்லை.
அப்போது நீலநிறச் சீருட அணிந்த பணியாள் ஒருவர் வந்து நர்ஸிடம் ஏதோ பேசிவிட்டுச் செல்ல..

''
அதோ அவர்தான் சாப்பாடு கொண்டுவர்றவர்.. எல்லாருக்கும் ரெண்டு சப்பாத்தி.. சாதம்! எனக்கு மட்டும் மூணு சப்பாத்தி, கூட்டு! கூட்டு கொஞ்சமாத்தான் கொடுப்பா.. நான் சாயந்தரம் தர்ற பாலை வாங்கி, குடிக்காம வச்சிருப்பேன்.. அதை சப்பாத்தில் ஊத்தி சாப்பிட்ருவேன்!'' என்றார்.
'
கடவுளே...!''
அந்தி சாய்ந்துவிட்டது. மிகப் பெரிய அந்த வளாகத்தின் மரத்து பறவைகள் ஏகப்பட்ட இரைச்சலுடன் கூட்டில் அடையத் தொடங்கியிருந்தன.

நீலச் சீருடை ஆளையே பார்த்தபடி பேசினார் அம்மா..
''
என்னை ஓல்ட் ஏஜ் ஹோம்ல விட்டதுக்கு, ஏதாவது நரகத்துல விட்டிருக்கலாம்.. கொடுமைம்மா அது! எல்லாரையும் டாய்லெட் கூட்டிட்டுப் போய் வர்றதுக்கு சங்கடப்பட்டு, மூத்திர ட்யூப் மாட்டிவிட்ருவாங்க.. எழுந்து நடக்கறப்ப, அதைத் தூக்கிண்டே நடக்கணும்.. இப்படி அங்கே நிறைய அக்கிரமங்கள்! எப்படியோ ரெண்டு வருஷம் ஓட்டினேன்.. முதல்ல வந்து பார்த்த சொந்தங்கள், அப்புறம் போன் விசாரிப்போட நிறுத்தினாங்க. அதுக்கப்புறம், அவங்க கூப்பிட்டப்போ, நான் பேசறதை நிறுத்திட்டேன். என் கணவரின் பென்ஷனையும் ஏதோ பண்ணிட்டாங்க.. எனக்கு வர்றதில்ல. என்னம்மா சொந்தம் பந்தம் எல்லாம்!'' & விரக்தியின் உச்சத்தில் கண்ணீர்கூட காய்ந்து விட்டது.

''
நல்ல நடை உடையாப் போன நான், அங்கே வழுக்கி விழுந்ததில நடக்க முடியாம, வாக்கர் வச்சு நடக்கற நிலைமைக்கு ஆளாயிட்டேன்! என்னால இனிமே அங்கே இருக்கவே முடியாதுன்றபோது, எனக்கு உன்னை மாதிரி பத்திரிகை உலகத்துல இருக்கற நண்பர்களும் சிலருமா சேர்ந்து என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தாங்க... வந்து நாலு மாசமாகுது..
ஆனா அம்மா.. இந்த ஹாஸ்பிடல்ல சும்மா சொல்லக் கூடாதும்மா.. ஃப்ரீ வார்டுன்னாலும் கவனிப்புக்கு எந்தக் குறையுமில்ல. தினமும் மதிய சாப்பாடு, சீஃப் டாக்டர் வீட்டிலருந்து வருது.. டாக்டருக்கு சாப்பாடு கொடுத்தனுப்பும்போது, எனக்கும் கொஞ்சம் சாதம், காய்கறிகள், கீரை, பழங்கள்னு கொடுத்தனுப்புறாங்க.. நான் தத்தெடுத்த புள்ளை என்னைத் துரத்திவிட்டுட்டான்.. ஆனா, இப்போ என்னைத் தத்தெடுத்துக்கிட்ட டாக்டரின் கருணையால நான் உயிரோட இருக்கேன்!'' என்றவர், ''ஸ்,.. அப்பா..'' என்று வலியில் முனகியபடி, திரும்பி அமர்ந்தார்.

''
இடுப்பும், முதுகும் வலி கொல்லுதும்மா.. நேத்து நைட் முழுதும் தூங்க முடியாம புரண்டு படுக்க முடியாம மரண அவஸ்தைப்பட்டேன்.. இன்னிக்கு ராப்பொழுது எப்படிப் போகப் போகுதோ.. தெரியலியே! ராத்திரி வந்தாவே பயமா இருக்கும்மா! யம்மாடி.. பசிக்குது.. இன்னும் சாப்பாடு வரலியே!'' என்றவர், ''அந்தப் பையில் பிஸ்கட் இருக்கு.. எடுத்துத் தர்றியாம்மா?'' என்றார்.
நாம், ''ஆப்பிள் நறுக்கித் தரட்டுமா?'' என்றதும், ''கத்தியெல்லாம் கிடையாதும்மா'' என்றார்.
பக்கத்து 'பெட்'காரரிடம் கேட்டு கத்தி வாங்கி, ஆப்பிளைக் கழுவிவிட்டு, நறுக்கித் தர.. வேகம் வேகமாக எடுத்துச் சாப்பிட்டார். பாவமாக இருந்தது!
எத்தனை நாடுகளைப் பார்த்தவர்.. எத்தனை உயர்மட்ட விருந்துகளில் கலந்துகொண்டவர்.. எத்தனை நட்சத்திர ஹோட்டல்களில் இவருக்குப் பாராட்டு விழா நடந்திருக் கும்.. இவரது கணவருடன் எங்கெல்லாம் போய் உணவு அருந்தியிருப்பார்.. வீட்டில் எப்படி எல்லாம் விதம்விதமாக சமைத்து சாப்பிட்டிருப்பார்..!'
ஒரு நிமிஷம் நாம் உணர்வுகளில் கரைய, கண்களை நீர் மறைத்தது.

தூரத்தில் உணவு வண்டி தெரிந்ததும் அனைத்து நோயாளிகளின் அட்டெண்டர்களும் சுறுசுறுப்பாகத் தயாரானார்கள், க்யூவில் நிற்க!
''
தட்டைக் கொடுங்கம்மா.. நான் வாங்கிட்டு வரேன்..'' என்றதும், ''ஊஹூம்.. உன்னை அவருக்குத் தெரியாது.. புது ஆளுனு ரெண்டு சப்பாத்தி போட்ருவார்.. எப்போதும் வாங்கற ஆயா வாங்கினாதான் மூணு சப்பாத்தியும் நிறையக் கூட்டும் போடுவார்!'' என்று பரிதவித்தார்!
அய்யோ.. கொடுமையே!
ஆயா கொண்டுவந்த தட்டில் சூடான சப்பாத்திகளைப் பார்த்ததும், பஞ்சடைந்திருந்த அந்தக் கண்களில் அப்படி ஒரு ஒளி! ஏதோ ஒரு வாரம் சாப்பிடாதவர் போல அவ்வளவு வேகமாக பிய்த்து வாயில் போட்டார். நாம் பாட்டிலில் இருந்து டம்ளரில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டுக் காத்திருந்தோம்.

''
எனக்கு சுகர் இருக்கே! அதனால சர்க்கரை தொட்டுக்கக் கூடாது!'' என்றவர் சாப்பிட்டு முடிக்க, தட்டை எடுத்துச் சென்று கழுவி வந்தோம்.
''
இது யாரு பாட்டி.. உங்க பேத்தியா?'' - பக்கத்து பெட்டில் இருந்த அம்மா விசாரிக்க..

''
எங்க பத்திரிகைக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க..'' என்று சந்தோஷமாக அறிமுகப்படுத்தினார்.
அந்த அம்மா நம்மைப் பார்த்து, ''பாவம்மா இந்தப் பாட்டி.. ஏதாவது எழுதுவாங்க.. படிப்பாங்க.. சீஃப் டாக்டர்கிட்டே போய்ப் பேசிட்டு வருவாங்க.. மத்தபடி இவங்களைப் பார்க்க எப்பவாவது வர்ற ஒருத்தரைத் தவிர யாருமே வர்றதில்லம்மா!'' என்றார்.

''
ஆமாம்மா.. இங்கே பாத்தியா.. எல்லா 'பெட்'டுக்கும் அட்டெண்டர் உண்டு.. எனக்கு மட்டும்தான் யாரும் கிடையாது. அதேமாதிரி இங்கே யாருக்காவது என்னை மாதிரி முழுசா நரைச்சிருக்கா பாரு.. எல்லாம் சின்னப் பொண்ணுங்க.. அதுக்குள்ள ஏதேதோ வியாதி வந்து அட்மிட் ஆகியிருக்காங்க.. நான் ஒருத்திதான் இவ்வளவு வயசாகி, முதுமையினால இங்க வந்திருக்கேன்!'' என்று சர்வசாதாரணமாகச் சொன்னபடி மீதமிருந்த பாலை வாயில் ஊற்றிக் கொள்கிறார் அம்மா.

''
எனக்கு யார் யாரோ உதவ வர்றதா சொல்றாங்கம்மா..என் தன்மானம் அதையெல்லாம் ஏத்துக்கறதுக்கு இடம் கொடுக்கலம்மா.. நான் அப்படி ஒரு வாழ்க்கை வாழலியே! இந்த நிலமையில அது தப்பு இல்லேன்னாலும் என் மனசு சம்மதிக்கலயே..'' என்று தன்னிலை விளக்கம் கொடுக்கும் அம்மா, கீழே விழுந்ததில் எழுத வராமல் இருந்த தன் விரல்களுக்கு, இரண்டு குயர் பேப்பர் வாங்கித் தரச்சொல்லி எழுதி எழுதிப் பயிற்சி கொடுத்து, இப்போது ஒருவிதமாக, புரியும் அளவுக்கு எழுதுகிறார்.
டயரி முழுவதும் கவிதைகள். பணம், தேர்தல், தெருநாய், செவிலியர்கள் (அந்த மருத்துவமனை நர்ஸ்கள் பற்றி).. இப்படி எக்கச்சக்க கவிதைகள் எழுதி வைத்திருக்கிறார். எல்லாவற்றையும் பொறுமையாகப் படித்துக் காட்டுகிறார்.
''
நேரமாயிடுச்சு போலயே! இருட்டிப் போயிடுச்சே! நீ எப்படிம்மா போவ? உங்க வீடு எங்கே இருக்கு?'' - அக்கறையோடு கேட்கிறார். நமக்கோ அங்கிருந்து கிளம்பவே மனசில்லை.

''
சரிம்மா. பத்திரமா கிளம்பு.. இன்னிக்கு பொழுது எப்படி ஓடப் போகுதோ, பகவானே'னு நினைச்சிட்டிருந்தேன்.. பகவான்தான் உன்னை அனுப்பி இருக்கார்.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நீ வந்தது... இதிலேயே நான் தூங்கிப் போயிடுவென்!'' - என்றவரிடம் மீண்டும் அந்தக் குழந்தைச் சிரிப்பு!
தாளமுடியாத வலியுடன், அவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பி, திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே அந்த வார்டை கடந்து படிகளில் இறங்கியபோது, கன்னங்களில் உருண்டது கண்ணீர்.
ச்சே...! என்ன வாழ்க்கை!

Read more...

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP